இலையுதிர்காலம்!!

இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் மரங்களின் அழகே தனிதான். அந்த அழகு ஓரிரு மாதங்களில் மங்கிப் போய், சோபையிழந்த தோற்றத்தை மரத்துக்கு கொடுத்து விடுகிறதே

:((((






கீழே.....
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் செந்நிற இலைகளுடன் அழகாய் இருந்த மரம் ஒரே மாதத்தில் எப்படியாகி விட்டது பாருங்கள். ம்ம்ம்.




பூக்கள் மட்டும்!!



இன்றைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இந்த செடி வித்தியாசமாக கண்ணில் பட்டது. அதை கைத்தொலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன்.

இந்த செடியை, அதில் நீலமும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அழகழகாய் தொங்கும் பூங்கொத்துக்களை பல தடவை இரசித்துப் பார்த்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின் மாற்றத்தால் இப்போது இப்படி இருக்கிறது. பாருங்கள் மரத்தில் இலைகள் எல்லாமே உதிர்ந்து போய் விட்டன. ஆனால் பூக்கொத்துகள் மட்டும் (நிறம் மாறி விட்டாலும் கூட) மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை.

எனக்கு ஏனோ (சம்பந்தமே இல்லாமல்) ஒரு விஷயம் மனதில் தோன்றியது. சில உறவுகளும், நட்புகளும் கூட இப்படித்தான் என்று தோன்றியது. தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். சில உறவுகளும், நட்புகளும் நம்மை மறந்து விட்டுப் போய் விட்டாலும், நம்மால் விலகிச் சென்று விட முடிவதில்லை.