1. ஐந்துக்கும் ஒன்பதுக்குமிடையிலுள்ள ஏதாவது ஒரு எண்ணை தெரிவு செய்யுங்கள்.
2. அதிலிருந்து ஐந்தைக் கழித்துக் கொள்ளுங்கள்.
3. வரும் எண்ணை மூன்றால் பெருக்கிக் கொள்ளுங்கள்.
4. இங்கே கிடைக்கும் எண்ணை, அதே எண்ணால் பெருக்கிக் கொள்ளுங்கள். அதாவது வர்க்கம் எடுங்கள்.
5. கிடைத்த எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்கள் இருப்பின், அவற்றை ஒரு இலக்கமாக வரும்வரை கூட்டிக் கொள்ளுங்கள். (உ.ம். 64: 6 + 4 = 10; 1 + 0= 1)
6. இந்த எண் ஐந்தை விட அதிகமானதாக இருந்தால், அதிலிருந்து 5 ஐ கழித்துக் கொள்ளுங்கள். ஐந்தை விடக் குறைவானதாக் இருந்தால், 5 ஐ கூட்டிக் கொள்ளுங்கள்.
7. வரும் எண்ணை மீண்டும் 2 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.
8. இப்போது வரும் எண்ணிலிருந்து 6 ஐ கழித்துக் கொள்ளுங்கள்.
9. இங்கே வரும் எண்ணுக்கு ஒழுங்கிலுள்ள ஆங்கில எழுத்தை தெரிவு செய்யுங்கள். (உ.ம். 1=A, 2=B, 3=C, 4=D...26=Z, etc)
10. அந்த ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு நாட்டின் பெயரை நினையுங்கள்.
11. இந்த பெயரில் வரும் இரண்டாவது எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு மிருகத்தின் பெயர் நினையுங்கள்.
12. அந்த மிருகத்தின் மிகப் பொதுவான நிறத்தை நினையுங்கள்.
நீங்கள் நினைத்த நாடு டென்மார்க், மிருகம் யானை, நிறம் சாம்பல் ஆக இருந்தால், நீங்கள் 90% க்கு மேற்பட்ட மனிதர்களைப் போலவே சிந்திக்கிறீர்கள்.
இங்கே வந்து பார்த்து முயற்சி செய்தவர்கள், நீங்கள் நினைத்தவை எவை என்பதை குறிப்பிட மறக்காதீர்கள்.
முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்.
Posted by கலை at 3 comments
Labels: புதிர்
கருவிப்பட்டை கேள்வி!
முடிந்தால் உதவுங்கள்!
எனது வலைப்பதிவுகளில் நான் இந்த கருவிப்பட்டையை இணைத்து விட்டேன். ஒவ்வொரு தனித்தனி பதிவுகளாக எடுத்துப் பார்க்கும்போது (உதாரணமாக> இந்த 'கருவிப்பட்டை கேள்வி!' என்ற தலைப்பில் click பண்ணி open பண்ணும்போது) , கருவிப்பட்டையானது பதிவுகளின் தொடக்கத்தில் தெரிகிறது. ஆனால், வலைப் பதிவை முழுமையாக எடுத்துப் பார்க்கும்போது(உதாரணம்> 'கலை' என்பதில் அல்லது 'சும்மா சும்மா' வில் click பண்ணி open பண்ணும்போது), பதிவுகளில் கருவிப்பட்டையைக் காணோம். ஏன் இது? இதை நிவர்த்தி செய்யும் வழி ஏதாவது உண்டா?
கலை
Posted by கலை at 8 comments
Labels: வலைப்பதிவு
புதிய வனத்தில் பரீட்சார்த்த பதிவு!
நந்தவனத்தில் அல்லது புதிய தமிழ்மணத்தில் எனது புதிய பரீட்சார்த்த பதிவை இடுகிறேன். பதிவு கருவிப்பட்டை வேலை செய்கிறதா என்று பார்க்கத்தான் இந்த பதிவு.
Posted by கலை at 0 comments
Labels: வலைப்பதிவு
இப்படியும் ஒரு ஆசிரியர்!
இது இன்னொரு ஆசிரியர் சம்பந்தமான கதை. அவர் ஒரு தாவரவியல் கற்பிக்கும் ரியூஷன் ஆசிரியர். மிகவும் கெட்டிக்காரர்தான். ஆனாலும் அவரை எனக்கு அதிகமாய் பிடிப்பதில்லை. காரணமுண்டு. நானும் எனது தோழியும் எமது இடத்தில் இருந்து அவரது டியூஷன் வகுப்பிற்கு போகும்போது எப்படியும், மற்றவர்கள் எல்லாம் முதலே வந்து அமர்ந்திருப்பார்கள். அதனால் நமக்கு அனேகமான நாட்களில் கடைசி வாங்கில்தான் கிடைக்கும். அந்த ஆசிரியர் என்னவோ கடைசி வாங்கில் இருப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல் அடிக்கடி கொமெண்ட் அடிப்பார். இவர் சொல்லி நமக்கென்ன ஆகப் போகிறது, அவர்பாட்டுக்குச் சொல்லி விட்டுப் போகட்டும் என்று நாம் விட்டு விடுவோம்.
எனக்கு தாவரவியலில் மிகவும் பிடித்தமான பகுதி, பரம்பரையியல். ஒருநாள் அவர் அதில் ஒரு கணக்கு கேள்வியை கொண்டு வந்தார். அந்தக் கேள்வி வழக்கமான கேள்விகளை விட கொஞ்சம் வித்தியாசமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்த கேள்வியை தந்துவிட்டு, மாணவர்களிடம் சவால் விடுவதுபோல் "எங்கே இந்த கேள்வியை முடிந்தால் செய்யுங்கள் பார்ப்போம்" என்றார். எல்லோரும் மூளையை பிசைய ஆரம்பித்தோம். எனக்கு பிடித்த பகுதி என்பதாலும், நம்மை குறைவாக மதிப்பிடும் இவரது சவாலை முறியடித்தே ஆக வேண்டும் என்பதாலும், நான் மிகவும் தீவிரமாக சிந்தித்து, அந்த கணக்கை செய்து முடித்து விட்டேன். என்னருகில் இருந்த சினேகிதி "உடனே அவருக்கு காட்டுங்கோ. இவருக்கு எப்பவும் எங்களில ஒரு குறைதான்" என்று தூண்டினார். நானும் கையை உயர்த்தினேன். அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார். காரணம் வகுப்பில் நான் அதிகமாக கதைப்பதில்லை (அந்த காலத்தில் அப்படித்தான் இருந்தேன், ஹி ஹி). வழக்கமாக் கேள்விகள் தந்து செய்வதற்கு விட்டாரென்றால், அருகில் வந்து சரியா என்று பார்ப்பார். அதே போல் இன்றைக்கும் வந்து பார்ப்பார் என்றுதான் நான் எதிர் பார்த்தது. ஆனால் அவரோ கரும்பலகையில் வந்து அந்த கணக்கை அனைவருக்கும் செய்து காட்டும்படி சொல்லி விட்டார். வகுப்பில் கிட்டத்தட்ட 60 பேர் வரையில் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் எனக்கு அத்தனைபேர் மத்தியில் முன்னே போய் கரும்பலகையில் எழுதுவது முடியாத காரியமாக இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனது சினேகிதியோ, "இவருக்கு விடக் கூடாது. நீங்கள் போய் அதை செய்து காட்டி விட்டு வாங்கோ" என்று தள்ளி விட்டார். நானும் சரியென்று எழுந்து போனேன்.
வெண்கட்டி (அதுதானே chalk க்கு தமிழ்) யை கையில் தந்தார். நான் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தபோது, நான் பயத்தில் அழுத்திய அழுத்தத்தில் வெண்கட்டி உடைந்து உடைந்து விழுந்து கொண்டிருந்தது. எனவே இடை இடையே எழுத வேண்டிய வசனங்களைத் தவிர்த்து விட்டு, எப்படியோ ஒருமாதிரி கணக்கை மட்டும் செய்து முடித்து விட்டு வந்து அமர்ந்தேன். அவருக்கு தனது சவாலை முறியடித்தது, அதுவும் தான் குறைவாக மதிப்பிட்டு கூறும் பின் வாங்கிலிருப்பவர் ஒருவர் வந்து செய்து விட்டுப் போனது பெரிய அவமானமாகத் தெரிந்ததோ என்னவோ, நான் எழுதிய விதங்களில் வசனங்கள் வரவில்லையென்றும், அதனால் இதை ஏற்றுக் கொள்வது கடினம் என்றும் கூறினார். அவர் கூறியதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் 'இதே போன்ற கேள்வி பரீட்சைக்கு வந்தால் எப்படி இடை இடையே வசனங்கள் எல்லாம் வைத்து எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியும்தானே' என்று எண்ணிக் கொண்டேன். தொடர்ந்து என்ன வசனங்கள் இடையில் வர வேண்டும் என்று கூறி விட்டு, அன்றைய வகுப்பை அத்துடன் முடித்துக் கொண்டு போய் விட்டார்.
அவரைப் பார்த்து நான் அறிந்து கொண்டது ஒரு ஆசிரியர் எப்படி இருக்க கூடாதென்பது, ஹி ஹி.
Posted by கலை at 8 comments
Labels: பாதித்தவை
புதிரா??
இது ஒரு சிறிய கணக்கு. இந்தக் கணக்கை மனதில் செய்து பாருங்கள். எழுதவோ, கல்குலேட்டரைப் பாவிக்கவோ வேண்டாம். மனதில் செய்து பார்த்ததும், முதலில் உங்களுக்கு தோன்றும் விடை சரியா என்று பின்னர் செக் பண்ணிக் கொள்ளுங்கள்.
பி.கு> இது ஒரு மிகச் சிறிய கணக்குத்தான். இருந்தாலும் இந்தக் கணக்கை மனதால் செய்யும்போது நமது மூளை நம்மை ஏமாற்றி விடுவதாகச் சொல்கிறார்கள்.
கணக்கு இதுதான். எங்கே கணக்கை மனதால் கூட்டி விடையை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் இரண்டாம் முறை கூட்டியோ, அல்லது எழுதிக் கூட்டியோ, அல்லது கல்குலேட்டர் பாவித்தோ பாருங்கள். (உங்கள் மூளை உங்களை ஏமாற்றியதா, இல்லை காப்பாற்றி விட்டதா என்று எனக்கும் கூறுங்கள். :))
1000 ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் 40 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் அதனுடன் ஒரு 1000 ஐ கூட்டுங்கள்.
அதனுடன் 30 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் 1000 ஐ கூட்டுங்கள்.
இப்போது அதனுடன் 20 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் ஒரு 1000 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் இதனுடன் ஒரு 10 ஐ கூட்டுங்கள்.
உங்களுக்கு வரும் மொத்தம் எவ்வளவு?
Posted by கலை at 11 comments
Labels: புதிர்
புதிர்!!!!
அடாடா.... ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. எனக்கு ஈமெயிலில் வந்த ஒரு புதிரை இங்கே இணைக்கலாம் என்று வந்தேன்.
This is a killer.....
5 minutes and you're a genius. This is an IQ test commonly given to job applicants in Japan.
Instructions
(For those of you that cannot read Japanese)
Object
Everybody has to cross the river.
Rules
Only two persons on the raft at a time.
The father cannot stay with any of the daughters without their
mother's presence.
The mother cannot stay with any of the sons without their father's
presence.
The thief (striped shirt) cannot stay with any family member without
the presence of the policeman.
Only the father, the mother and the policeman know how to operate the
raft.
இந்த பக்கத்தில் புதிர் இருக்கு. போய் பாருங்கள். வெற்றி கிட்டினால், எனக்கும் சொல்லுங்கள்.
http://freeweb.siol.net/danej/riverIQGame.swf
To start, click on the big blue circle on the right.
To move the people, click on them.
To move the raft, click on the pole on the opposite side of the
river.
(It may get a little violent, so be prepared).
Posted by கலை at 7 comments
Labels: புதிர்